பென்சிலைக்கொண்டு, தோலில் ஒரு உயிர் மின் சாதனத்தை வரைவதன் மூலம் தங்கள் உடல்நிலைகளை கண்காணிக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது இல்லை என்றாலும், வரும்காலங்களில் இது சாத்தியம் ஆகும் என்று மிசோரி பல்கலைக்கழக பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புகள் தேசிய அறிவியல் அகாடமியின் புரோசிடிங்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பொறியியல் கல்லூரியின் உதவி பேராசிரியரான ஜெங் யான் கூறுகையில், “தற்போதுள்ள பல வணிகரீதியான ஆன்-ஸ்கின் பயோமெடிக்கல் சாதனங்களில் பெரும்பாலும் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. ஒன்று பயோமெடிக்கல் டிராக்கிங் கூறு, மற்றொன்று பிளாஸ்டிக் போன்ற நெகிழ்வான பொருள், ஒரு நபரின் உடலுடன் தோல் தொடர்பை பேணுவதற்கான ஒரு உறுப்பு கட்டமைப்பை வழங்குவதற்காக பயோமெடிக்கல் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன.