அமெரிக்க-தெற்கு ஆசியா இடையேயான உறவு
1978ஆம் ஆண்டுக்குப் பின், அமெரிக்கவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் 2000ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார். 1998ஆம் ஆண்டு இந்தியா அணுஆயுதச் சோதனையில் ஈடுபட்டதும் எழுந்த சர்வதேச அழுத்தத்தைக் குறைக்க இது உதவியது. இருப்பினும், இந்தியா அணுஆயுதச் சோதனையில் ஈடுபடக்கூடாது என்று பில் கிளின்டன் அரசு தொடர்ந்து வலியுறுத்தியே வந்தது.
இந்திய-அமெரிக்கா நாடுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் இந்தப் பயணத்தின்போது கையெழுத்தானது. இந்தியாவின் பொருளாதாரம் வளரத் தொடங்கிய அந்த நேரத்தில், கிளின்டனின் வருகையானது அமெரிக்கா பாகிஸ்தானிடமிருந்து விலகி இந்தியா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததையே காட்டியது.
2006ஆம் ஆண்டு ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். அவரும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் அணுசக்தி, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை இறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து 2007ஆம் ஆண்டு அணுஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்ந்தத்தைத் தாண்டி அணு ஆயுதங்களை வைத்துக்கொள்ள இந்தியாவுக்கு மட்டும் அனுமதியளித்தது.
2007ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கவுக்குமிடையே கையெழுத்தான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் வலுப்பெற உதவியது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பல ஆண்டுகள் தடைக்குப் பின், இந்திய மாங்காய்கள் அமெரிக்கா சென்றன.
புஷ், மன்மோகன் சிங் ஆகியோருக்கிடையே 2006ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே மாங்காய்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம் இரட்டிப்பானது. இதற்குப் பதிலாக, அமெரிக்காவிலிருந்து ஹார்லி-டேவிட்சன் மோட்டார் பைக்குகளை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை இந்தியா தளர்த்தியது.
பொருள்கள் மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகம் 2006ஆம் ஆண்டு சுமார் 45 பில்லியன் டாலராக இருந்தது. இது 2010ஆம் ஆண்டு 70 பில்லியன் டாலராக உயர்ந்தது என்று அமெரிக்க பொருளாதார பகுப்பாய்வு பணியகம் தெரிவித்தது.
2010ஆம் ஆண்டு அமெரிக்காவும் இந்தியாவும் பாதுகாப்பு குறித்து முக்கிய விவாதத்தில் ஈடுபட்டன. அதைத்தொடர்ந்து 2010ஆம் ஆண்டு இந்தியாவின் உயர்மட்ட அலுவலர்கள், அமெரிக்காவுக்குச் சென்றனர். அதைத்தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவை "ஒரு தவிர்க்க முடியாத கூட்டாளி" என்று குறிப்பிட்டார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரு நாடுகளுக்குமிடையேயான உறவை, "இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை" என்றார்.
இதையும் படிங்க: அதிக வெப்பநிலையை தாங்குமா அமெரிக்காவின் முதல் குடும்பம்?
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை ஆதரித்த அமெரிக்கா