அகழ்வாராய்ச்சிப் பணியில் ஈடுபடும் கிளேட்டன் ஃபிப்ஸ், அவரது குழுவினர் 2006இல் மூன்று கொம்புகள் கொண்ட ட்ரைசெட்டாப்ஸ் மற்றும் டைரனோசொரஸ் ரெக்ஸ் வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புக்கூட்டையும் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரண்டு டைனோசர்களும் சண்டையிட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. டைனோசரின் எலும்புக்கூடுகளுக்கு வணிக ரீதியாக நல்ல விலை கிடைக்கும் என்பதால், அதனை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்திட முடிவுசெய்துள்ளனர். ஏனென்றால் முன்பு, டி. ரெக்ஸ் வகையைச் சேர்ந்த டைனோசரின் எலும்புக்கூடு 8 மில்லியனுக்கு விற்பனையாகியுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு, இரண்டு எலும்புக்கூடுகளுக்கும் அடிப்படை விலையாக 9 மில்லியனை நிர்ணயம்செய்து 2011இல் ஏலத்தில் வைத்துள்ளனர். ஆனால், யாரும் அதனை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்திட விருப்பம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர், 2013இல் மீண்டும் ஏலத்திற்கு விட்டுள்ளனர். அப்போதும், அடிப்படை தொகையைத் தாண்டி ஏலம் எடுத்திட நிறுவனங்கள் முன்வரவில்லை.