அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை தயாரிப்பதில் புகழ்பெற்றவை. இருப்பினும், அதைத்தாண்டி பல்வேறு துறைகளிலுள்ள சிறந்த நிறுவனங்களிலும் டெஸ்லா தனது முதலீடுகளை செய்துள்ளது.
உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 தொற்றுக்கான மருந்தை தயாரிக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் முயன்றுவருகின்றனர். அதன்படி, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த க்யூர்வாக் என்ற நிறுவனம் messenger RNA என்ற முறையைப் பயன்படுத்தி கரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
க்யூர்வாக் ஒரு RNA பிரிண்டரை உருவாக்க முயற்சித்துவருகிறது. இது நமது செல்களை கரோனா ஆன்ட்டிபாடிகளை உருவாக்க துண்டுகிறது. இந்நிலையில், கரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் க்யூர்வாக் நிறுவத்திற்காக RNA பிரிண்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டெஸ்லா அறிவித்துள்ளது.