இந்தியாவுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை விலக்கிக்கொள்வதாக அமெரிக்க அறிவித்திருந்தது. அதற்குப் பதிலடி தரும் வகையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட 25 பொருட்களுக்கு 120 சதவீதம் வரை இந்தியா வரி விதித்தது.
அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை ஏற்க முடியாது - ட்ரம்ப் - வரி விதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் 25 பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள வரியை ஏற்கமுடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Trump
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ இந்திய வருகையில், இரு நாடுகளுக்குமிடையே உள்ள வர்த்தக முரண்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றார். ஜி20 மாநாட்டில் நடந்த ட்ரம்ப் - மோடி சந்திப்பின் போதும் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்கப் பொருட்களுக்கு இந்திய விதித்துள்ள வரியை இனிமேலும் ஏற்க முடியாது" என்று ட்வீட் செய்துள்ளார்.
Last Updated : Jul 10, 2019, 11:48 AM IST