தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்கா புறப்பட்ட முதலமைச்சர்! - அமெரிக்கா புறப்பட்ட முதலமைச்சர்

லண்டன்: அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து நாட்டிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.

tamilnadu cm departs america

By

Published : Sep 1, 2019, 7:00 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள அரசுமுறை சுற்றுப் பயணத்தின் இரண்டாம் கட்டமாக இங்கிலாந்து நாட்டிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்திற்கு செல்லும் அவர் அங்குள்ள அமெரிக்க தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

அதையடுத்து, சேலம் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள கால்நடை பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள அப்பகுதிகளில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணைகளை பார்வையிடவுள்ளார்.

மேலும், அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் வழியில், துபாயில் நடைபெறவிருக்கும் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details