தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வானிலையால் தள்ளிப்போகும் ஸ்பேஸ் எக்ஸின் விண்வெளிக் கனவு! - ஸ்பேஸ் எக்ஸ் வானிலை காரணமாக ராக்கெட் லான்ச்

புளோரிடா : எஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராக்கெட் லான்ச் , மோசமான வானிலை காரணமாக மேலும் சில நாட்கள் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking News

By

Published : May 31, 2020, 12:34 AM IST

ஸ்பேஸ்-எக்ஸ் என்ற தனியார் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், புளோரிடாவிலிருக்கும் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து கடந்த 27ஆம் தேதி மாலை ஃபல்கான் 9 ராக்கெட் மூலம் இரண்டு நாசா வீரர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தது.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சாதனை முயற்சியைக் காண்பதற்குக் கோடிக்கணக்கான மக்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். இரண்டு நாள்களாக மழை பெய்துகொண்டிருந்த காரணத்தினால், ராக்கெட் ஏவுதலில் சிறிது குழப்பம் நிலவிவந்தது.

இருப்பினும் புதன்கிழமை வானிலை சீரான காரணத்தினால், திட்டமிட்டபடியே விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். சரியாக ராக்கெட் ஏவுதலுக்கு 17 நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த சூழலில், வானிலை திடீரென்று மாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக, விண்வெளிப் பயணத்தை ஒத்திவைக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து மோசமான வானிலையே நிலவுவதால் இந்த ராக்கெட் லான்ச் மேலும் சில நாட்கள் ஒத்திவைக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாசா மேலாளர் ஜிம் பிரிடென்ஸ்டீன், "எத்தனை முறை லான்ச் நடந்தாலும் சரி விண்வெளி வீரர்கள் டவுக் ஹூர்லே, பாப் பென்கென் ஆகியோரின் பாதுகாப்புதான் முக்கியம். எல்லாம் சரியாக இருந்தால் மட்டுமே ராக்கெட் லான்ச் நடக்கும்" என்றார்.

இதனிடையே, வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை நல்ல வானிலை அமைய 60 சதவீதம் வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளனர்.

அமெரிக்க மண்ணிலிருந்து விண்வெளி வீரர்கள் 2011ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஹாங்காங்கிற்கு எதிராக புதிய சட்டம் - சீனாவுக்கு வடகொரியா ஆதரவு

ABOUT THE AUTHOR

...view details