உலகில் சர்க்கரை நோயின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை சர்க்கரை நோய் உள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே. சர்க்கரை நோய் உள்ளவர்களில் டைப் ஒன் சர்க்கரை நோயாளிகள் தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு முறை இன்சுலின் ஊசியை போட்டுக்கொள்வர்.
இன்சுலினுக்கு பதில் மாத்திரை: அமெரிக்க ஆய்வாளர்களின் சாதனை! - இன்சுலின் வேண்டாம்
சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரையை கண்டுபிடித்து அமெரிக்க ஆய்வாளர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்சுலின் ஊசிக்கு பதில் மாத்திரையை உபயோகப்படுத்தலாம் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் முதலில் பன்றியின் மீது சோதனை செய்துள்ளனர், அந்த சோதனை இறுதியில் வெற்றியானது. அதனைத் தொடர்ந்து அந்த பரிசோதனையின் முடிவுகள் 'நேச்சர் மெடிசன்' என்னும் இதழில் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஆய்வாளர்களின் இந்தக் கண்டுபிடிப்பு புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கழிப்பறையில் ஸ்மார்ட்போணை அதிக நேரம் பயன்படுத்தினால் மூல நோய்!