அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, பணியிடங்களில் தன்பாலின சமூகத்தினருக்குச் சம உரிமை மறுக்கப்படுவதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை ஒரே வழக்காகச் சேர்த்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்திவந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. அதில், "பாலியலின அடிப்படையில் வேலைவாய்ப்பு, பணியிடங்கள் யாரிடமிருந்து பாகுபாடு காட்டக் கூடாது என உரிமையியல் சட்டம் (1964) கூறுகிறது. இது பெண், ஆண்களுக்கு மட்டுமல்ல தன்பாலின சமூகத்தினருக்கும் பொருந்தும்" எனக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தன்பாலின சம உரிமைப் போராட்டத்தில் இந்தத் தீர்ப்பு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அந்நாட்டில் உள்ள 81 லட்சம் தன்பாலின ஊழியர்களின் வேலைவாய்ப்பில் இந்தத் தீர்ப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் மதித்து நடக்க வேண்டும். இது மிகவும் சக்திவாய்ந்த தீர்ப்பு" என்றார்.
இதையும் படிங்க : ட்ரம்ப் ஆதரித்த மலேரிய மருந்து: பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஃப்.டி.ஏ.