கோவிட்-19 தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா இருக்கிறது. இதன் காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா பாதிப்புகள் குறைந்து, பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும்போது, அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகள் முதலில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஹெச் - 1பி, ஹெச் - 2பி, எல் மற்றும் ஜே பிரிவு விசாக்கள் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஐடி துறையில் பணியாற்றும் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக இந்தியர்கள், ஹெச்-1பி விசாவிலேயே அமெரிக்கா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் அரசின் இந்த உத்தரவு டெக் நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை அதிருப்தி அளிப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க பொருளாதாரம் உலக அளவில் சிறப்பான இடத்தை அடைந்ததற்கும், தொழில்நுட்பத்தில் தலைமை இடத்தில் இருப்பதற்கும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் பங்கு அளர்ப்பரியது. கூகுள் இன்று இந்த இடத்தில் இருப்பதற்கும் அவர்களின் பங்கு முக்கியமானது.