மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலிகொண்ட கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக நாடுகள் பல ஒன்றிணைந்து ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில் வெர்ஜீனிய பல்கலைகழகத்தின் இதய மருத்துவரும், நிர்வாக இயக்குநர்களில் ஒருவருமான வில்லியம் பிராடி கரோனா வைரஸ் தொற்றின் தாக்குதல் குறித்து ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஆய்வுக் கட்டுரை தயார் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதால் இவர்களுக்கு இதய செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்பதை அறிய முற்பட்டதாக தெரிவித்தார்.
இதயைடுத்து, சுகாதார வழிகாட்டுதல்களின்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இதய செயல்பாடுகளை ஆராய்ந்தபோது, பாதிப்பிற்குள்ளானவர்களில் 24 விழுக்காட்டினர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட பலரும் சுவாசப் பிரச்னைகள் குறித்து மருத்துவர்களிடம் தெரிவிக்கின்றனரே தவிர இதய செயல்பாடுகள் குறித்து தெரிவிப்பதில்லை. இதனால், பெரும்பாலானோர் உயிரிழக்கவும், இதய குறைபாடுகளால் பாதிப்பிற்குள்ளாவதாகவும் தெரிவித்தார்.
அவருடைய ஆய்வுக் கட்டுரையில், அவசரத் தேவைகளுக்கான மருத்துவர்களை நியமிப்பதன் மூலமும், பரவி வரும் புதிய நோய்க்கிருமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், இதய நோய்களை கட்டுப்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை மற்றும் இதய செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒருமுறையாவது அதிகரிக்கக்கூடும் எனத்தெரிவித்தார்.
கரோனாவும் இதய செயலிழப்பும்