உலக பெருந்தொற்றான கரோனா பாதிப்பிற்கு தற்போது வரை சிகிச்சை முறையோ, மருந்தோ கண்டுபிடிக்கப்படாத சூழலில், பல்வேறு விதமாக சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது. இதில் முக்கிய சிகிச்சை முறையாக பிளாஸ்மா சிகிச்சை முறை கருதப்படுகிறது.
கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவந்த நபர்களின் உடலில் உள்ள ரத்தத்தை பயன்படுத்தி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சையை சர்வதேச அளவில் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி, முன்னணி மருத்துவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவமனை இந்த பிளாஸ்மா சிகிச்சை குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்ட நபர்கள், சிகிச்சைக்கு உட்படாத நபர்கள் குறித்து விரிவான தகவல்களை இந்த ஆய்வு அளிக்கின்றது.