தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வயிற்றில் பீர் சுரக்கும் வினோத மனிதன்... குழம்பிய மருத்துவர்கள்! - man arrested for drunken drive

வாஷிங்டன்: விசித்திர நோயால் ஒருவருக்குத் தானாக உடம்பில் பீர் சுரப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுரக்கும் பீர்

By

Published : Oct 25, 2019, 11:40 PM IST

அமெரிக்காவின் வடக்கு கோரலினா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த வழியே வந்த நபரைச் சோதனை செய்யும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்துக்காகக் கைது செய்துள்ளனர். ஆனால் அவர் நான் குடிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில்,"அந்த நபரின் ரத்தத்தில் மதுவின் அளவு 200 mg/dL இருக்கிறது. அதாவது 10 மதுபானங்களைக் குடிப்பதற்கு சமமான அளவு இருக்கிறது” என்றார்.

தானாக சுரக்கும் பீர்

இதனால் காவல்துறையினரும், மருத்துவர்களும் இவர் குடிக்கவில்லை எனச் சொல்வதை நம்பாமல் இருந்துள்ளனர். மருத்துவ சோதனை முடிவுகள் சாதாரணமாக வந்தாலும், அவரிடையே உடலில் Saccharomyces cerevisiae (பேக்கர்ஸ் ஈஸ்ட்) எனும் பூஞ்சை இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து நிபுணர்களிடம் ஆலோசித்தபோது மிகப் பெரிய அதிர்ச்சி அனைவருக்கும் காத்திருந்தது. இவர் auto-brewery syndrome (ABS) என்னும் அரிய நோயால் பாதிப்படைந்துள்ளார் எனத் தெரிவித்தார்.இந்த நோயின் காரணமாகவே அவரது உடலில் புது விதமான பூஞ்சை உருவாகியுள்ளது .இதனால்தான் உடலில் உள்ள அனைத்து கார்போஹைட்ரேட்ஸ்களும் பீர் ஆக மாறியுள்ளது

தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலமாகியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் இந்த அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட 5 நபருக்கு மட்டுமே மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details