தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3, 300 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து அந்நாட்டு குடிமக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளி தொடர்பாக முக்கிய விதிமுறைகளை அறிவித்துள்ள பிரேசில் அரசு, அந்நாட்டு குடிமக்கள் பொதுவெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது.
உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், பிரேசில் அரசு அந்நாட்டு குடிமக்களுக்கு இதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டுக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்து விசித்திர முறையில், கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, அந்நாட்டில் உள்ள அண்ணல் காந்தி சிலைக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊரடங்கால் பசியில் தவிக்கும் வனவிலங்குகள்... உதவி கேட்கும் பூங்கா காப்பாளர்கள்!