கொலராடோ: கரோனா தொற்று அமெரிக்காவில் பரவி வரும் நிலையில், அணில் ஒன்றுக்கு புபோனிக் பிளேக் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது அரிய வகை நோய்க் கிருமி என்றாலும், ஒட்டுண்ணிகளால் தீவிரமாகப் பரவக் கூடியது என சுகாதார அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.
கொலராடோவில் உள்ள அணிலுக்கு புபோனிக் பிளேக் தொற்று! - Middle Ages
புபோனிக் பிளேக் நோய் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. மனித வரலாற்றில் மிக மோசமான தொற்றுநோய்க்கு இது காரணமாகும். இது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
சி.என்.என் மேற்கோள் காட்டிய ஜெபர்சன் கவுண்டி பொது சுகாதார (ஜே.சி.பி.எச்) துறையின் செய்தி வெளியீட்டின் படி, ஜூலை 11 அன்று மோரிசன் நகரில் அணிலுக்கு நடத்தப்பட்ட சோதனையில் புபோனிக் நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மனித வரலாற்றில் மிக மோசமான தொற்று நோய்க்கு இது காரணமாகும். இது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். முன்காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் மட்டும் 50 மில்லியன் மக்கள் இதுபோன்ற தொற்று நோய்களால் மரணித்துள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.