தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்ப் மூத்த மகனுக்கு கரோனா பாதிப்பு! - கரோனா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்பின் மூத்த மகன் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

President Donald Trump Donald Trump Jr coronavirus Trump's eldest son tests positive for coronavirus கரோனா வைரஸ் டொனால்ட் ட்ரம்ப் ட்ரம்ப் கரோனா ட்ரம்ப் மூத்த மகனுக்கு கரோ President Donald Trump Donald Trump Jr coronavirus Trump's eldest son tests positive for coronavirus கரோனா வைரஸ் டொனால்ட் ட்ரம்ப் ட்ரம்ப் கரோனா ட்ரம்ப் மூத்த மகனுக்கு கரோனா பாதிப்பு னா பாதிப்பு
President Donald Trump Donald Trump Jr coronavirus Trump's eldest son tests positive for coronavirus கரோனா வைரஸ் டொனால்ட் ட்ரம்ப் ட்ரம்ப் கரோனா ட்ரம்ப் மூத்த மகனுக்கு கரோனா பாதிப்பு

By

Published : Nov 21, 2020, 8:33 AM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ட்ரம்ப் குடும்ப செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்நிலையில் அவரது மருத்துவ சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அவர் கரோனா வைரஸின் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து ட்ரம்ப் குடும்ப செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ஜூனியர் ட்ரம்ப் (டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன்) கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது” என்றார்.

ஏற்கனவே அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா, மகன் பரோன் ஆகியோர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். இந்நிலையில், ட்ரம்ப் மூத்த மகனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ட்ரம்ப் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார் - ஒப்புக்கொள்ளும் குடியரசு கட்சியினர்

ABOUT THE AUTHOR

...view details