அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி போக்குவரத்து தனியார் சேவை நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். இந்நிறுவனம் உருவாக்கிய 'க்ரூ டிராகன் கேப்சியூல்' என்ற ராக்கெட் மூலம் நேற்று (மே 31) நாசாவின் மூத்த வெண்வெளி ஆராய்ச்சி வீரர்களான பாப் பெஹன்கென், டக் ஹர்லி ஆகியோர் விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்றனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக க்ரூ டிராகன் ராக்கெட் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தோடு எவ்வித உதவிகளும் இன்றி, தானாக தன்னை இணைத்துக் கொண்டது.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தரையிறங்கிய பெஹன்கென், ஹர்லி ஆகியோரை, அங்குள்ள நாசா வீரரான கிரிஸ் கெஸ்சடி என்பவர், அழைப்பு மணியை அடித்து, அவர்களுக்கு உற்சாக வரவேற்பை அளித்தார்.
மறுபுறம் நாசாவில் இருந்து அவர்களின் பாராட்டுகளை (ப்ராவோ) அங்கிருந்த விண்வெளி வீரர்களுக்கு அனுப்பியிருந்தனர்.