'ஸ்பேஸ்-எக்ஸ்' தனியார் அமெரிக்க விண்வெளி மையம் சார்பாக, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து மே 27ஆம் தேதி, விண்வெளிக்கு இரண்டு வீரர்களை ராக்கெட்டில் அனுப்பவுள்ளனர். இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, நடக்கப்படவுள்ளதால் மக்கள் மத்தியிலும், பல ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் டக் ஹர்லி, பாப் பெஹன்கென் ஆகிய இரண்டு வீரர்களுக்கும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஹிப் ஸ்பேஸ்சூட்கள் (hip spacesuits), குல்-விங் டெஸ்லாஸ் (gull-wing Teslas) , ஸீலிக் ராக்கெட்ஷிப் (sleek rocketship) வழங்கப்பட்டுள்ளது. இவைகளின் நிறங்கள் கறுப்பு, வெள்ளை நிறங்களின் கலவையாக உள்ளது. இந்த வண்ண ஒருங்கிணைப்பு என்பது ஸ்பேஸ்-எக்ஸ்,டெஸ்லா ஆகிய இரண்டு நிறுவனங்களின் பின்னால் உந்து சக்தியாக செயல்பட்ட எலோன் மஸ்க்குக்கு (Elon Musk) நன்றி தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.