தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிறிஸ்துமஸ் பரிசுகளுடன் ராக்கெட்டை ஏவிய ஸ்போஸ் எக்ஸ்! - சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான பொருள்களுடன் அவர்களுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகளும் ஸ்போஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

SpaceX
SpaceX

By

Published : Dec 7, 2020, 5:15 PM IST

சர்வதேச விண்வெளியில் இருக்கும் வீரர்களுக்குத் தேவையான உணவு, ஆய்வுப்பொருள்கள் அவ்வப்போது பூமியிலிருந்து ராக்கெட் மூலம் அனுப்பப்படும். அதன்படி இந்த முறை அனுப்ப வேண்டிய ராக்கெட், இன்று கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. முன்னதாக, இந்த ராக்கெட் ஏவுதல் மோசமான வானிலை காரணமாக சில நாள்கள் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவுகளுடன் செலுத்தப்பட்ட ராக்கெட் ஸ்போஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். செலவுகளைக் குறைக்க ராக்கெட் ஏவுதல் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, எலான் மஸ்க்கின் ஸ்போஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பரிசுகளுடன் ராக்கெட்டை ஏவிய ஸ்போஸ் எக்ஸ்

2,900 கிலோகிராம் எடையுள்ள ஒரு காப்ஸ்யூல் இந்த ராக்கெட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு, தேவையான ஆராய்ச்சி கருவிகளுடன் கிறிஸ்துமஸ் பரிசுகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: வீடியோ கான்பரன்சிங்கில் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்!

ABOUT THE AUTHOR

...view details