அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் இருந்து விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புவது வழக்கான ஒன்று. இம்முறை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் தயாரித்த டிராகன் எனும் விண்கலம் மூலம் முதன்முறையாக நாசாவின் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாசா-ஸ்பேஸ் எக்ஸ் இடையிலான முதல் வர்த்தக ரீதியலான இந்த தனியார் விண்கலத்தின் சோதனை ஓட்டம் 3 மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கடந்த சனிக்கிழமை (நவம்பர் 14) முதற்கட்டமாக நான்கு விண்வெளி வீரர்களுடன் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக, அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.