உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 என்ற புதிய ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருந்தது. இந்த ராக்கெட் மூலம் 60 செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாராகிவந்தது.
தொழில்நுட்ப ரீதியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டது ராக்கெட் விண்ணில் ஏவுவது தயாராக இருந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ராக்கெட் விண்ணில் செலுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தற்போது தள்ளி வைத்துள்ளது.