அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் ஈராக்கில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி உயிரிழந்தார். ஈரான் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் போக்கு, தற்போது நேரடிப் போராக மாறும் அபாயத்தை இந்தத் தாக்குதல் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்தச் செயலால், அமெரிக்கா ஈரான் மட்டுமல்லாமல், ஈராக், இஸ்ரேல், சிரியா, சவுதி அரேபியா என ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "சமீபத்தில் ஈராக்கில் அமெரிக்காவின் படைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. இதில், ஒரு அமெரிக்கர் உயிரிழந்தார். நால்வர் படுகாயம் அடைந்தனர். குவாசிம் சுலைமானியின் உத்தரவைத் தொடர்ந்துதான், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.