அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் ஆப்கானிஸ்தானில் ஆபத்தான சூழலில் துன்புறுத்தலுக்கு நடுவில் வசித்துவரும் இந்து, சீக்கிய மதச் சிறுபான்மையினரை அந்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குள் மீளக்குடியமர்த்த ஆதரவை வழங்கக் கோரி ஒரு தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. காங்கிரஸின் உறுப்பினரான ஜாக்கி ஸ்பீயரால், கடந்த வாரம் முன்மொழியப்பட்ட இத்தீர்மானத்தை பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.
அந்த தீர்மானம் ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு அகதிகள் பாதுகாப்பை வழங்க வேண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் அமைப்பு முறையிலான மத துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் இருத்தலின் ஆபத்து ஆகியவற்றை மேற்கோளிட்டு காட்டியது. ஆப்கானிஸ்தானின் பழங்குடிகளான சீக்கியர்களும், இந்துக்களும் ஆபத்தான சிறுபான்மையினராகக் கருதப்பட வேண்டியுள்ளது.