தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வந்து விட்டது புதிய சமூக வலைத்தளம் "ஷ லேஸ்" - கூகுள் அறிமுகம் - Google

நியூயார்க்: கூகுள் நிறுவனம் தனது அடுத்த கண்டுபிடிப்பாக "ஷ லேஸ்" சமூக வலைத்தளத்தை முதல்கட்டமாக நியூயார்க் நகரத்தில் அறிமுகம் செய்துள்ளது.

ஷ லேஸ்

By

Published : Jul 18, 2019, 7:59 AM IST

உலகில் முன்னணி நிறுவனமான கூகுள், பல துறைகளில் சாதனை புரிந்தாலும் சமூக வலைத்தளங்களில் தனக்கான இடத்தினை பிடிக்க முடியவில்லை. கூகுள் நிறுவனத்தின் முந்தைய படைப்பான ஆர்குட், கூகுள் பிளஸ் என்னும் வலைத்தளங்கள் பயனாளர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதனால் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தால் சமூக வலைத்தளங்களை நிறுத்திவிட்டது.

இருந்தபோதும், விடா முயற்சியின் அடுத்த கண்டுபிடிப்பாக "ஷ லேஸ்" என்னும் சமூக வலைத்தளத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இது நியூயார்க்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "ஷ லேஸ்" வலைத்தளம் பொதுமக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைத்தளம் போல் இல்லாமல், மாறுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வலைத்தளம் அருகில் உள்ள மக்களிடம் நேரடி தொடர்பு ஏற்படுத்தவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக நியூயார்க் நகரில் அறிமுகமான "ஷ லேஸ்" வலைத்தளம், விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த சமூக வலைத்தளம் இந்தியாவில் அறிமுகமானால் வரவேற்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details