தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி! - நியூ ஆர்லியன்ஸ் நகரில் துப்பாக்கிச்சூடு

வாசிங்டன்: நியூ ஆர்லியன்ஸ் நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா
அமெரிக்கா

By

Published : Dec 2, 2019, 12:17 PM IST

அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுற்றுலாவாசிகள் கூடும் இந்த இடத்தில் இந்திய நேரப்படி காலை 3:20 மணிக்கு துப்பாக்கிச்சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. சில மணி நேரங்கள் கழித்து மற்றொரு இடத்தில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரு துப்பாக்கிச்சூடு சம்கவத்திற்கும் தொடர்புள்ளதா என காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட யாரையும் காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

பல நட்சத்திர விடுதிகள் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றம் குறைந்துவந்துள்ளது. பிரபல அணிகள் மோதிய கால்பந்து போட்டிக்காக, இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மெக்சிக்கோவில் 14 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை.!

ABOUT THE AUTHOR

...view details