அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டெம் பள்ளி உள்ளது. நேற்று மதியம் சுமார் இரண்டு மணியளவில் இந்த பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி! - school shootout
வாஷிங்டன்: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு
இத்தாக்குதலில் அப்பாவி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இத்தாக்குதலால் படுகாயமடைந்த ஏழு பேர் மருத்தவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாக்குதலை நடத்திய இரண்டு பேரையும் அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் அதே பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.