தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வரலாற்றில் முதன்முறை... அமெரிக்காவின் மேயரான ஏழு மாதக் குழந்தை! - அமெரிக்காவின் மேயரான ஏழு மாதக் குழந்தை

டெக்சாஸ்: அமெரிக்காவில் மிகவும் இளம்வயதில் மேயரான சார்லி என்ற குழந்தைக்கு மக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

youngest-mayor
அமெரிக்கா மேயர்

By

Published : Dec 19, 2019, 6:30 AM IST

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் உள்ள வைட்ஹால் பகுதியின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வர்களுக்கு நிதி திரட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேயர் பதவி ஏலம் விடப்படுவது வழக்கம்.

அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மிகவும் கவுரமான மேயர் பதிவியை சார்லி என்ற ஏழு மாத குழந்தை அதிக விலைக்கு ஏலம் எடுத்து வெற்றிபெற்றது. இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வைட்ஹால் பகுதியில் மேயர் சார்லிக்கு பதிவுயேற்பு விழா நடைபெற்றது. இதில் 150க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்துகொண்டு மேயருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பின்னர், மேயர் சார்லி சார்பாகப் பேசிய அவரின் தந்தை வில்லியம், ‘நான், வில்லியம் சார்லஸ் மக்மில்லன், மேயர் பதவியை உண்மையாக நிறைவேற்றுவேன், என் திறனுக்கு ஏற்றவாறு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும் அன்பாக இருப்பேன். தூய்மையான நாட்டு வாழ்க்கை, தன்னார்வ தீயணைப்புத் துறைக்கு பிஸ்க்கேட் எடுத்துச் செல்வேன். எனவே எனக்கு அம்மாவும், அப்பாவும் உதவுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

அமெரிக்காவின் இளம் வயதில் மேயரான சார்லி குழந்தையுடன் பலர் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு பகிர்ந்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும், டெக்சாஸ் செனட்டர் டெட் க்ரூஸை சந்திப்பதற்கு அடுத்த மாதம் சார்லி வாஷிங்டன் டி.சி.க்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெப்பம்!

ABOUT THE AUTHOR

...view details