20 ஆண்டுகளுக்கும் மேலாக வியாழன் கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளுடன் நெருக்கமாக பறந்த பின்னர், நாசாவின் ’ஜூனோ’ விண்கலம், வியக்கத்தக்க காட்சிகளை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.
வியாழன் கிரகத்தின் சுற்றுப்பாதையில் பயணித்தபோது வியாழனின் மிகப்பெரும் துணைக்கோளான கேனிமேட்டுக்கு மிக அருகில், அதாவது 645 மைல் (1,038 கிலோமீட்டர்) தூரத்தில் கடந்த ஜூன் 7ஆம் தேதி ஜூனோ விண்கலம் பறந்துள்ளது. அப்போது தன்னுடைய நட்சத்திரங்களை புகைப்படம் எடுக்கக்கூடிய அதிநவீன புகைபடக் கருவி மூலம், இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது.