கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்றால் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் பல மருந்து நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் ஆரம்பகட்ட சோதனை கடந்த மாதம் சியாட்டில் நகரில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களில் ஒன்றான இன்னோவியோ, கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி சோதனையை பென்சில்வேனியா மாகாணத்தில் தொடங்கியுள்ளது. இப்போது நடத்தப்படும் ஆரம்பக் கட்ட சோதனைகள் வெற்றியடையும்பட்சத்தில், அதிக தன்னார்வலர்களுடன் அடுத்தக்கட்ட சோதனை மேற்கொள்ளப்படும் என்று இன்னோவியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.