அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடம் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) அக்கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று, உச்சியிலிருந்து திடீரென கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில், சாலையில் நின்றுகொண்டிருந்த நான்கு கார்கள் மீது கிரேன் விழுந்ததால் அவை நொறுங்கின.
அந்த விபத்தில் கிரேனை இயக்கிய இருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், ஒரு பெண், ஒரு ஆண், நான்கு மாதங்களே ஆன ஒரு குழந்தை ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
கிரேன் விழுந்த விபத்தில் 4 பேர் பலி அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கட்டுமானப் பணியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.