தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஸ்கியூபா டைவிங் செய்து சுறாக்களுக்கு உணவளித்த கிறிஸ்துமஸ் தாத்தா! - கிறிஸ்துமஸ் தாத்தா

பிரெசிலியா: ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீன்காட்சியகம் ஒன்றில் உயிரியல் நிபுணர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சுறா மீன்களுக்கு உணவளித்த நிகழ்வு அங்கு வந்திருந்த சுற்றாலப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

scuba diving santa RIo, கிறிஸ்துமஸ் தாத்தா ஸ்கியூபா டைவிங்
scuba diving santa RIo

By

Published : Dec 14, 2019, 10:11 AM IST

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அக்குவா ரியோ மீன் காட்சியகத்தில் பணிபுரிந்து வரும் உயிரியல் நிபுணர் வோல்மெர தெ அகியார் சல்வதோர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீன் கண்காட்சியகத்துக்கு வரும் சுற்றாலப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை பயன்படுத்திக்கொண்டு, கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சல்வதோர் முடிவுசெய்தார்.

இதையடுத்து, புகழ்பெற்ற கற்பனைப் பாத்திரமான கிறிஸ்துமஸ் தாத்தா (சான்டா கிளாஸ்) போன்று உடையணிந்து மீன் தொட்டிக்குள் ஸ்கியூபா டைவிங் செய்து, அதிலிருந்த சுறா மீன்களுக்கு உணவளித்தார்.

இந்த நிகழ்வு அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை குறிப்பாக சிறுவர், சிறுமியரை வெகுவாக கவர்ந்தது.

சுறா மீன்களுக்கு உணவளிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா

இதுபற்றி சுற்றுலாப் பயணியான ராக்கேல் காப்ரால் கூறுகையில், "ரொம்ப நல்லா இருந்துச்சு, இதுபோன்ற நிகழ்வுகளை நாங்க எதிர்பார்க்கல" என்றார்.

இம்மாத இறுதிவரை இந்த கிறிஸ்துமஸ் தாத்தாவின் சாகசங்கள் தொடரும்.

இதையும் படிங்க: '200 ஊழியர்களுக்கு ரூ.70 கோடி போனஸ்' - கிறிஸ்துமஸ் பரிசுமழைப் பொழிந்த நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details