தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மாணவர்களுக்கான அடையாள அட்டையில் ஆபாச உரையாடலுக்கான எண்ணை அச்சிட்ட பள்ளி நிர்வாகம்! - trending news

அமெரிக்கா: பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு வழங்கிய அடையாள அட்டையில் ஆபாச உரையாடலுக்கான எண்ணை அச்சிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி நிர்வாகம்

By

Published : Oct 30, 2019, 10:38 PM IST

புளோரிடாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் லான்காஸ்டர் பள்ளி இயங்கிவருகிறது. இங்குப் படிக்கும் மாணவர்களுக்குச் சமீபத்தில்தான் அடையாள அட்டையைப் பள்ளி நிர்வாகம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். தற்கொலைத் தடுப்பு எண் இருக்கும் இடத்தில் ஆபாச உரையாடலுக்கு அழைக்கும் அலைபேசி எண் இருந்துள்ளது. இதை உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குப் பெற்றோர் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆபாச உரையாடலுக்கான எண்ணை அச்சிட்ட பள்ளி நிர்வாகம்

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், "நாங்கள் தற்கொலைத் தடுப்பு தொடர்பு எண்ணைதான் அச்சிட்டோம். ஆனால் தவறுதலாக இரண்டு எண் கூடுதலாக அச்சிடப்பட்டுள்ளது. இதன் விளைவு ஆபாச உரையாடல் தொடர்பு எண்ணாக அந்த எண் மாறியுள்ளது. இந்தத் தவறுக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்கிறோம், விரைவில் சரிசெய்துவிடுவோம். தற்போது மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட அடையாள அட்டையைத் திரும்ப பெற்றுவிட்டோம். விரைவில் புதிய அடையாள அட்டை வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.

சமூக வலைதளத்தில் அடையாள அட்டையின் புகைப்படத்தைப் பகிர்ந்து பல தரப்பு மக்கள் தங்கள் கண்டங்களைத் தெரிவித்துவருகின்றனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details