தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சவுதி அரசுக்கு உளவு பார்த்த முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் - அமெரிக்கா நீதித்துறை அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டன்: ட்விட்டர் ஊழியர்களை வைத்து சவுதி அரசு, ஆயிரக்கணக்கான ட்விட்டர் வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

Saudi spy twitter

By

Published : Nov 7, 2019, 11:05 PM IST

சவுதி தலைமையை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், விமர்சகர்களைக் கண்டறிந்து களையும் நோக்கில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கின் மனுவில், " அமெரிக்காவைச் சேர்ந்த அஹமத் அபௌமோ (Ahmad Abouammo), சவுதி அரேபியாவைச் சேர்ந்த அலி அல்ஸாபாரா (Ali Alzabarah) ஆகிய முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள், மற்றும் இன்னொரு நபரை வைத்துக்கொண்டு, சவுதி அரேபியா அரசு ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளை உளவு பார்த்துள்ளது.

இதையும் வாசிங்க :'காஷ்மீர் நிலைப்பாட்டை புரிந்துகொண்டதாலேயே சவுதி மவுனம் காக்கிறது'

சவுதி அரசை நிந்தித்து வந்த விமர்சகர் ஒருவர், தொலைக்காட்சி நட்சத்திரம் ஒருவரும் இதில் அடக்கம்.

இதற்காக ரகசிய வங்கிக் கணக்குகளில் அவர்களுக்குக் கோடிக்கணக்கான பணத்தை சவுதி அரசு வாரியிறைத்துள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

சவுதியைச் சேர்ந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா - சவுதி உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் , இந்த புதிய குற்றச்சாட்டு உறவை மேலும் பாழாக்கக்கூடும்.

இதையும் வாசிங்க : 'கஷோகியின் கொலை என் கண்காணிப்பில்தான் நடந்தது!' - சவுதி இளவரசர் ஒப்புதல் வாக்குமூலம்!

அமெரிக்க மண்ணில் சவுதி அரசு உளவு பார்த்தாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது இதுவே முதன் முறையாகும்.

ABOUT THE AUTHOR

...view details