ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவில் நடைபெற்ற கச்சா எண்ணெய் ஆலைகள் தாக்குதலுக்கு பொறுப்பேற்றனர். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவும் ஈரானை குற்றம்சாட்டிவருகின்றனர்.
இது குறித்து பாம்பியோ, ஏமன் தாக்குதல் நடத்தியதாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை. இந்த திடீர் தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது. இதற்கு ஈரான் பதில் சொல்லியே தீர வேண்டும். அமெரிக்கா அதன் கூட்டணி நாடுகளுடன் கலந்தாலோசித்து எரிசக்தி விநியோகம் தடையின்றி நடைபெற வழிவகுக்கும். சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 100 தாக்குதல்களில் பின்னணியில் டெஹ்ரான் இருக்கிறது. ஆனால் ரவ்ஹானியும் ஷெரிப்பும் ராஜதந்திரமாக அதனை மறைக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.