தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்க தேர்தலில் சாதனை படைத்த திருநங்கை! - செனட் சபை உறுப்பினரான சாரா மெக் பிரைட்

வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக தேர்தலில் வெற்றிபெற்ற சாரா மெக் பிரைட் என்ற திருநங்கை, செனட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

்ே்
ே்ே்ே

By

Published : Nov 4, 2020, 2:20 PM IST

Updated : Nov 4, 2020, 3:55 PM IST

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நவம்பர் 3 நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகிறது. 270 நம்பரை பிடிக்கப்போவது யார் என உலகமே ஆவலோடு காத்திருக்கிறது. அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் இருந்து வருகின்றனர்

இந்நிலையில், டெல் அவேர் பகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக செனட் சபை உறுப்பினராகியுள்ளார். வழக்கறிஞரான 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட், எல்.ஜி.பீ.டி.கியூ உரிமைகளுக்காக போராடியுள்ளார்.

இந்த தேர்தல் வெற்றி குறித்து சாரா மெக் பிரைட் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி..நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க தேர்தலில் சாதனை படைத்த திருநங்கை

இவர் ஏற்கனவே முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்துடன் பணியாற்றியுள்ளார். வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த முதல் திருநங்கை என்ற பெருமையை தனது பிரசார அறிவிப்பில் தெரிவித்தார். 2017 இல் வர்ஜீனியா மாகாணத்தில் ஒரு இடத்தை வென்ற டானிகா ரோம் உட்பட மாநில சட்டமன்றங்களில் தற்போது நான்கு திருநங்கைகள் உள்ளனர்.

Last Updated : Nov 4, 2020, 3:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details