தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனை ஊக்கப்படுத்திய ரியான் ரெனால்ட்ஸ் - சி.கே.பி.ஜி செய்தி நிருபர்

லாஸ் ஏஞ்சல்ஸ்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது இளம் ரசிகருக்கு ஊக்கமளிக்கும் வகையில் பாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் வீடியோ அனுப்பியுள்ளார்.

Ryan Reynolds
Ryan Reynolds

By

Published : Jan 17, 2021, 6:21 PM IST

"டெட்பூல்" நட்சத்திரம் ரியான் ரெனால்ட்ஸின் 11 வயதான பிராடி டெரி என்ற ரசிகர், மூன்றாம் கட்ட பி ஹோட்கின்ஸ் லிம்போமா, கிரோன் நோயுடன் வாழ்க்கைக்கு போராடிவருவது அவருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடிவரும் பிராடி டெரிக்கு ஊக்கமளிக்கும் வகையில், பாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை சி.கே.பி.ஜி செய்தி நிருபர் காடன் ஃபான்ஷா தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், "பிராடி, நான் ரியான் ரெனால்ட்ஸ். உங்கள் நிலையை பற்றி கேள்விப்பட்டேன், இந்த வீடியோவை உங்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். நான் உங்களைப் பற்றியும், நினைக்கிறேன் என்று உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். உன் வாழ்க்கையில் உன்னை மிகவும் நேசிக்கும் மக்கள் உன்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். நான் உங்களுக்கு நிறைய அன்பை அனுப்புகிறேன். வரும் நாட்களில் உங்களை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். சரி நண்பா, பை, " என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் வீடியோ அனுப்பியது தொர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிராடியின் தாயார் ராண்டி டெரி, "ரெனால்ட்ஸ் வீடியோவைப் பார்த்ததும் தனது மகன் மிகவும் உற்சாகமடைந்தார். 'நான் சிறப்பு உணர்கிறேன் - நான் திரைப்பட நட்சத்திரம் போல் உணர்கிறேன்', என்று ராண்டி கூறியதாக தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details