தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெனிசூலாவிற்கு வந்தடைந்த ரஷ்ய ராணுவம்! மீண்டும் உருவெடுத்த பதற்றம் - military

கராகஸ்: அரசியல் நெருக்கடி நீடிக்கும் வெனிசூலாவில், ரஷ்ய ராணுவம் அங்கு வந்திறங்கியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

வெனிசூலாவிற்கு வந்தடைந்த ரஷ்ய ராணுவம்

By

Published : Mar 25, 2019, 9:53 AM IST

Updated : Mar 27, 2019, 8:41 AM IST

வெனிசூலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபர் நிக்கோலஸ் மடூரோவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.

இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 50 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. எனினும், அதிபர் பதவியிலிருந்து தான் இறங்கப் போவதில்லை என்றும் பொதுத்தேர்தல் நடத்தப்படாது என்றும் மடூரோ அறிவித்தார். மேலும், மனிதாபிமான உதவிகளை நாட்டுக்குள் கொண்டுவரவும் தடை விதித்தார்.

இதனையடுத்து, வெனிசூலாவில் நடைபெறும் அரசியல் நெருக்கடியை பிற தென் அமெரிக்க நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஜூவான் குவாய்டோவின் தலைமை பாதுகாவலரை அந்நாட்டு அரசு கைது செய்யது. இந்த நடவடிக்கைக்கு குவாய்டோ கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், வெனிசூலாவின் நீண்டகால நட்பு நாடான ரஷ்யா, தனது ராணுவத்தை வெனிசூலாவிற்கு அனுப்பிவைத்துள்ளது. இதனால் மேலும் பதற்றமான சூழல் மீண்டும் உருவெடுத்துள்ளது.அதிபர் நிக்கோலஸ் மடூரோ தலைமையிலான அரசு மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 27, 2019, 8:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details