தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வெனிசுலாவுக்கு ராணுவ விமானம் அனுப்பிய ரஷ்யா: அமெரிக்கா கண்டிப்பு - அமெரிக்கா

வாஷிங்டன்: வெனிசுலாவுக்கு ராணுவ விமானங்களை அனுப்பிய ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்

By

Published : Mar 27, 2019, 9:42 PM IST

இதுகுறித்து அமெரிக்கா தரப்பில் கூறியுள்ளதாவது, “ ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் வெனிசுலாவின் தலை நகரம் அருகில் சனிக்கிழமை வந்துள்ளது. வெனிசுலாவில் தற்போது நிலவும் நெருக்கடி சூழ்நிலையில் ரஷ்யாவின் செயல் பொறுப்பற்ற தன்மையை அதிகரித்திருக்கிறது” என்று ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து இரண்டு விமானங்கள் பறந்து வந்தன என்பதை வெனிசுலா துணை அதிபர் டியோஸ்டாடா உறுதிப்படுத்தி இருக்கிறார். அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா பதிலளிக்க மறுத்துவிட்டது.வெனிசுலாவில் அமெரிக்காவின் ராணுவ தலையீட்டை ரஷ்யா கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக்கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்தது.

இதனைத் தொடர்ந்து வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ட்ரம்ப் தலைமையிலான அரசை வெனிசுலா அதிபர் மதுரோ தீவிரவாதக் குழு என்று விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details