விண்வெளியில் முக்கியமான டூல்ஸ்களை பாதுகாப்பாக வைப்பதற்கு நாசா ஆராய்ச்சி மையம் "ரோபோடிக் டூல்ஸ் அலமாரி" (Robotic Tool Stowage (RiTS) ஒன்றை உருவாக்கியுள்ளது. இதை 'ரோபோ ஹோட்டல்' என அழைக்கின்றனர். இந்த ரோபோ ஹோட்டல் விண்வெளி நிலையத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக இரண்டு ரோபோக்களைத் தங்க வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த ரோபோக்கள் ஆராய்ச்சி மையத்தில் அம்மோனியா போன்ற வாயுக்களால் ஏற்படும் கசிவைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றது. ஆதலால், இந்த ரோபோக்களுக்கு ரோபோடிக் எக்ஸ்டெர்னல் லீக் லொகேட்டர் (Robotic External Leak Locators) (RELL) எனப் பெயர் வைத்துள்ளனர். இதில் ஒரு ரோபோவை கடந்த 2015ஆம் ஆண்டு, நாசா உருவாக்கியது. இந்நிலையில், இந்த ரோபோவிற்குத் துணையாக தற்போது, மற்றொரு ரோபோவை உருவாக்கி ஒன்றாகத் தங்க வைப்பதற்கு முடிவு செய்துள்ளது.