தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ட்ரம்பின் இளைய சகோதரர் காலமானார்!

வாஷிங்டன்: நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் உயிரிழந்தார்.

Robert Trump passed away
Robert Trump passed away

By

Published : Aug 16, 2020, 11:45 AM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரரும் அமெரிக்காவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவருமான ராபர்ட் ட்ரம்ப் இன்று(ஆகஸ்ட் 16) உயிரிழந்தார்.

கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த 71 வயதான ராபர்ட் ட்ரம்ப் சிகிச்சைக்காக நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அதிபர் ட்ரம்ப் அவரை நியூயார்க் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இந்நநிலையில், ராபர்ட் ட்ரம்ப் சிகிச்சைப் பலனிற்றி நியூயார்க் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தர். இது குறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அன்புச் சகோதரர் ராபர்ட் இன்று நள்ளிரவு காலமானார் என்பதை கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் எனது சகோதரர் மட்டுமல்ல, அவர் எனது சிறந்த நண்பரும் ஆவார். அவரது இழப்பு எனக்கு கடினமாக இருக்கும். எனது இதயத்தில் ராபர்ட்டின் நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப்புடன் பிறந்தவர்களில் ராபர்ட் ட்ரம்ப் தான் இளையவர். இவர் டொனால்டு ட்ரம்ப்புடன் நெருக்கமாக இருக்கும் நபர்களில் ஒருவர். இருப்பினும், டொனால்டு ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றது முதல் பொதுவாழ்வில் இருந்து சற்று விலகியே ராபர்ட் ட்ரம்ப் இருந்தார்.

இதையும் படிங்க: ஹெச்-1 பி விசா தடையில் தளர்வு அறிவிப்பு - நிம்மதியில் இந்தியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details