அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மசோதா கடந்த மாதம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலானது.
இந்த மசோதா குறித்து வாக்கெடுப்பு புதன்கிழமை நடந்தது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 227 உறுப்பினர்களும் எதிராக 186 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதா ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது டொனால்ட் ட்ரம்ப் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை கட்டுப்படுத்துகிறது.