தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

74ஆவது ஐநா கூட்டத்தில் மோடி உரையாற்றப்போவது என்ன?

74ஆவது ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி, முக்கியமாக அனைத்து நாடுகளும் நிலைநாட்ட வேண்டியது அமைதி, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி என்பது குறித்தே உரையாற்றவுள்ளார்.

By

Published : Sep 21, 2019, 8:02 PM IST

Updated : Sep 21, 2019, 8:17 PM IST

modi

பிரதமர் நரேந்திர மோடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா-வில் உரையாற்றவுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 70ஆவது ஐநா சபையில் அவர் பங்கேற்றதற்கு பிறகு இந்தியாவில் நிறைய மாற்றங்கள் நடந்தேறியுள்ளன. தற்போது உலகத் தலைவர்கள் பங்கேற்கும் அஜென்டா 2030இல் அவரது நிலையான வளர்ச்சி இலக்குகளை கூறவுள்ளார். பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த அஜென்டா 2030இல் 177 நாடுகள் பங்கேற்கும். அதில் இந்தியா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமைத்தாங்கி உரையை ஆரம்பிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி வரும் 23, 24ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துரையாடப்படுவதே அஜென்டா 2030 குறித்தே. மேலும் இந்த நிகழ்ச்சியில் பருவநிலை மாற்றம், உடல்நலன் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள் ஆகியவை குறித்தும் கலந்துரையாடப்பட இருக்கின்றன. அஜென்டா 2030 குறித்து இந்தியா சார்பில் பிரதமர் மோடி பேசப்படுவதில் மேல் குறியிட்ட மூன்றும் முக்கிய இடம் வகிக்கும்.

அது மட்டுமல்லாது வரும் 24ஆம் தேதி காந்தியின் 150ஆவது பிறந்தநாள் குறித்தும் எடுத்துரைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் 2014ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட வேண்டும் என்று மோடி ஐநா-விடம் கூறியிருந்தார். இதனால் உடல்நலன் பாதுகாப்பு, ஆரோக்கியம் மேம்படும் என்றும்; ஆகையால் உலகம் முழுவதும் இந்த தினத்தன்று உடல்நலன் குறித்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதற்கு ஐநா 75 நாட்களுக்குள் 177 நாடுகளிலும் இந்த தினம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றது.

PM Narendra Modi at UN

2014ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் பிரதமர் மோடியால் மாற்றங்கள் நடந்தேறியுள்ளதில் முக்கியமானவை இதோ:

  • 2019ஆம் ஆண்டு பாதியிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் (Renewable energy) தன்னிறைவு பெற்று, இந்தியா அதனுடைய இலக்கை வெற்றிகரமாக அடைந்தது. அதையடுத்து அடுத்த ஆண்டில் இதைவிட இருமடங்கு ஆற்றலை அடையும் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.
  • 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது 'ஆயுஸ்மான் பாரத் திட்டம்'. இதனால் 5 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். அவர்களது உடல்நலன் பாதுகாப்பிற்காகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் நிலையான வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
  • 'சுவச் பாரத்' என்ற 'தூய்மை இந்தியா' விழிப்புணர்வு இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் வரவேற்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் பொதுவெளியில் மலம் கழிக்கும் நிலையை, இந்த விழிப்புணர்வின் மூலம் மாற்றியமைத்துள்ளார் பிரதமர் மோடி.
    PM Narendra Modi

இந்நிலையில் "அமைதி இல்லையென்றால் நிலையான வளர்ச்சி இல்லை. நிலையான வளர்ச்சி இல்லை என்றால் அமைதி இல்லை" என அனைத்து நாட்டுத் தலைவர்களும் இந்த கோட்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அஜென்டா 2030 மூலம் கோரப்படுகிறது. ஐக்கிய நாட்டு சபையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 27ஆம் தேதி உரையாற்றவுள்ளார். இதையடுத்து ஏமன், ஆஃப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஐநா சபையில் இந்தியாவுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்.

74ஆவது ஐநா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முக்கியமாக அனைத்து நாடுகளும் நிலைநாட்டப்பட வேண்டியது அமைதி, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி என்பது குறித்தே உரையாற்றவுள்ளார். பன்முகசார்பியம் மீதான நம்பிக்கை (Faith to Multilateralism) மீது ஐநா தீர்மானம் நிறைவேற்றியது. அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் மோடி அவர் உரையாற்றும் போது இதனை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கட்டுரையை இந்தியாவின் தூதரும், ஐக்கிய நாட்டின் நிரந்தர பிரதிநிதியான அசோக் முகர்ஜி எழுதியுள்ளார்.

Last Updated : Sep 21, 2019, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details