அமெரிக்காவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் பாதிப்பு நாடாளுமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை. ஏற்கனவே அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், தற்போது மேலவை உறுப்பினர் ஒருவரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எனப்படும் கீழவையைச் சேர்ந்த குடியரசு கட்சி உறுப்பினர் பென் மெக் ஆடம்ஸ் என்பவருக்கும், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் மரியோ பாலார்ட் என்பவருக்கும் கடந்த வாரம் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று செனட் எனப்படும் மேலவையின் உறுப்பினரான ரான் பால் என்பவரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.