தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'என்னையா வேலையை விட்டு தூக்குன' - முதலாளியின் ஃபெராரி கார் மீது டிரக்கை ஏற்றிய ஓட்டுநர்! - உலகச் செய்திகள்

வாஷிங்டன்: பணிநீக்கம் செய்த முதலாளியை பழிவாங்குவதற்காக, அவரது சொகுசு கார் மீது ஓட்டுநர் டிரக்கை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

sd
sdsd

By

Published : May 12, 2020, 12:41 PM IST

Updated : May 12, 2020, 4:17 PM IST

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவர், தனது டிரக் ஓட்டுநர் சரியாகப் பணியாற்றவில்லை என பணிநீக்கம் செய்துள்ளார். சம்பளம் தராமல், நீக்கிய முதலாளிக்குப் பாடம் புகட்ட வேண்டும் என டிரக் ஓட்டுநர் நினைத்துள்ளார்.

இதையடுத்து, முதலாளியிடம் 'அங்கு நிற்கும் ஃபெராரி கார் உங்களுடையதா' எனக் கேட்டார். அவரும் 'ஆமாம்’ எனப் பதிலளித்தவுடன் 'என்னுடன் மோதியதற்கான விளைவை நீங்கள் இப்போது பார்ப்பீர்கள்' எனத் தெரிவித்துவிட்டு புறப்பட்டுள்ளார்.

சில நிமிடங்களில், முதலாளியின் ஃபெராரி கார் மீது, டிரக்கை ஏற்றி ஓட்டுநர் நொறுக்கியதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், டிரக் ஓட்டுநரைக் கைது செய்தனர்.

இதையும் படிங்க:வடமாநிலத் தொழிலாளர்களின் 6 செல்போன்களைத் திருடிய நபர் கைது

Last Updated : May 12, 2020, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details