அமெரிக்கா நாட்டின் மிசூரி பகுதியில் நாய்க்குட்டி ஒன்று, சாலையில் பாதங்கள் அடிப்பட்ட நிலையில், மீட்டுக்பட்டு "மேக்ஸ் மிஷனி" என்னும் விலங்குகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கு பாதுகாப்பாக இருந்த நாய்க்குட்டி பிறந்து 10 வாரங்கள் ஆன நிலையில் திடீரென்று, அதன் நெற்றி பகுதியில் கூடுதல் வால் ஒன்று முளைத்துள்ளது. இதைப் பார்த்த மருத்துவர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த நாய்க்குட்டிக்கு 'நர்வால் தி லிட்டில் மந்திர ஃபர்ரி யூனிகார்ன்' (Narwhal the Little Magical Furry Unicorn) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பல தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.
நாய்க்குட்டிக்கு யூனிகார்ன் போல் நெற்றியில் கூடுதல் வால் - தத்தெடுக்கக் குவியும் மக்கள் - Puppy born with extra tail on head at America
ஜெபர்சன் சிட்டி: ஜாக்சன் பகுதியில் யூனிகார்ன் குதிரை போன்று நாய்க்குட்டிக்கு நெற்றியில் வால் முளைத்துள்ளது மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நெற்றியில் கூடுதல் வால்
இதுகுறித்து மேக்ஸ் மிஷனின் நிறுவனர் ரோசெல் ஸ்டெஃபென் கூறுகையில், "நர்வால் நாய்க்குட்டிக்குத் தனது நெற்றியில் கூடுதல் வால் இருப்பது தெரியாது. இந்த வாலினால் நாய்க்குட்டிக்கு எந்த ஒரு உபயோகமும் இல்லை. ஆனால், இதனால் நர்வேல் நாய் உலகளவில் பிரபலமடைந்துள்ளது. மேலும் "நாய்க்குட்டியின் வால் ஆபத்தானது இல்லை. அதை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை" எனக் கால்நடை மருத்துவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நாய்க்கு டை அடித்து பாண்டாவாக மாற்றிய உரிமையாளர்!