கொலம்பியாவில் வால்மார்ட் கடைக்கு அருகே கனடா காவல்துறையில் பணியாற்றிய பஞ்சாப் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகவலின்படி, உயிரிழந்தவரின் பெயர் பிக்ரம்தீப் சிங், இவர் பஞ்சாப் அமிர்தசரஸ் பியாஸ் கிராமத்தைச் சேர்ந்தவர். 4-5 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் டெல்டா காவல்துறையில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து டெல்டா காவல்துறை அலுவலர் கூறுகையில், ஸ்கவுட்சாடெல் சென்ட்ரல் மாலின் பார்க்கிங் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அதில் டெல்டா காவல்துறை அலுவலர் பிக்ரம்தீப் சிங் உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.