தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: மேலும் 3 காவலர்கள் மீது வழக்குப்பதிவு - அமெரிக்க கறுப்பினர் கொலை

வாஷிங்டன்: ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினர் படுகொலைசெய்யப்பட்ட வழக்கில், மேலும் மூன்று காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

america minneapolis
america minneapolis

By

Published : Jun 4, 2020, 4:40 PM IST

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், காவலர் ஒருவரின் பிடியில் சிக்கி ஜார்ஜ் ஃப்ளாய்ட் கறுப்பின அமெரிக்கர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கிவருகிறது.

ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டும், நிறவெறிக்கு எதிராக முழக்கம் எழுப்பியும் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, ஜார்ஜ் ஃப்ளாய்டை கொலைசெய்த டெரிக் சாவின் என்ற காவலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலைசெய்யப்பட்டபோது சம்பவ இடத்திலிருந்து தாமஸ் லேன், ஜெ. குயெங், தோ தாவோ ஆகிய மூன்று காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான டெரிக் சாவின் மீது எதிராகக் கூடுதல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : மீண்டும் பரிசோதனையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்!

ABOUT THE AUTHOR

...view details