தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உடல்நிலை தொடர்பாக நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் விளக்கம் - news today

தி வாய்ஸ் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் தனது உடல்நிலை குறித்து பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

nick jonas
நடிகர் நிக் ஜோனாஸ்

By

Published : May 18, 2021, 2:41 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவரான நடிகர் நிக் ஜோனாஸ் தனக்கு நிகழ்ந்த பைக் விபத்து குறித்து பகிந்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனாஸ் சில நாட்களுக்கு முன்பு பைக் விபத்தில் சிக்கினார். பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

அவர் பங்கேற்ற தி வாய்ஸ் என்னும் ரியாலிட்டி ஷோவிற்கு மிண்டும் திரும்பியுள்ளார். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, தனது உடல்நிலைக் குறித்து நிக் ஜோனாஸ் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் நிக் ஜோனாஸ்

அப்போது அவர் கூறுகையில், நான் நன்றாக இருக்கிறேன், நன்றாக உணர்கிறேன். வழக்கம்போல் உடல் ரீதியாக உற்சாகமாக இல்லாவிட்டால், நான் மேலே சென்று விடுவேன் என கூறியுள்ளார்.

அந்த வீடியோ, புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிக் ஜோனாஸ் பகிர்ந்துள்ளார். தற்போது தி வாய்ஸ் 20 வது சீசனில், பிளேக் ஷெல்டன், கெல்லி கிளார்க்சன் மற்றும் ஜான் லெஜண்ட் ஆகியோரும் உள்ளனர்.

இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு ஆதரவளித்த கங்கனா, கலாய்த்த நெட்டிசன்கள்: பன்ச் டயலாக் மூலம் பதிலடி தந்த சர்ச்சை நாயகி!

ABOUT THE AUTHOR

...view details