கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு உதவி செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அந்நாட்டிலிருந்து அழுத்தம் அளிக்கப்படுகிறது.
அந்நாட்டின் வர்த்தக கூட்டமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி இந்திய - அமெரிக்கர்கள் அமெரிக்க அரசுக்கு தொடர் அழுத்தத்தை தந்துவருகின்றனர்.
அந்நாட்டின் வர்த்தக கூட்டமைப்பின் துணை தலைவர் மைரோன் பிரிலென்டே, "இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 பேரலை காரணமாக ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த சூழலில் ஆஸ்ட்ரா சேனேகா தடுப்பூசிகள் அமெரிக்காவில் அதிகளவில் கையிருப்பு உள்ளது.
அவற்றை இந்தியா போன்ற நாடுகளுக்கு வழங்கி உதவ வேண்டும். இந்தியாவின் பிரச்னை என்பது உலகின் பிரச்னை ஆகும். உலக நாடுகளுக்கு இந்தியா உதவியது போல இந்தியாவுக்கு நாம் உதவ வேண்டிய காலம் இது. இதன் மூலம் சர்வதேச சகோதரத்துவம் வலுப்படும்" என்றார்.