தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 26, 2019, 2:36 PM IST

ETV Bharat / international

கருக்கலைப்பு ஏற்றுக்கொள்ளவே முடியாதது: போப் பிரான்சிஸ்

வாஷிங்டன்: கருக்கலைப்பு என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்று என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ்

அண்மையில் அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ், கருக்கலைப்பு என்பது மதம் சார்ந்தது அல்ல, அது மனிதம் சார்ந்தது என்றும், மனித வாழ்க்கை என்பது மிகவும் புனிதமானது, குழந்தையை கருவிலேயே அழிப்பது என்பது கொடூர செயல் என்று கூறியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கூறியுள்ளது.

மேலும், உங்களுடைய பிரச்னையை தீர்க்க இன்னொரு உயிரைக் கொன்றால் உங்கள் சொந்த பிரச்னை தீர்ந்து விடுமா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

போப் பிரான்சிஸின் கருக்கலைப்பு மீதான கருத்துகள் அமெரிக்க மாகாணங்களான அல்பாமா, ஜார்ஜியா, மிசோரி உள்ளிட்ட மாகாணங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த மாகாணங்களில் ஆறு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு கூடாது என்ற சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details